He gives us varied experiences across our life. This blog is about his personal experiences about Him in His Places

Saturday, May 22, 2010

வெள்ளியங்கிரி தரிசனம் - ஐந்தாம் பாகம்


ஆண்டி சுனை என்பது அதிஅற்புதமான நீருற்று. சும்மா ச்ச்ச்சில் என்று இருக்கும் தண்ணி நாங்கள் அங்கே சென்ற நேரம் காலை சுமார் பத்து மணி இருக்கும். சாதாரணமாக தண்ணி கண்டால் கொஞ்சம் ஜகா வாங்கும் நான் , இங்கே குளித்தே ஆகா வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டுவிட்டேன். 


சுனையில் இறங்கினால், செம சில்லென்று இருக்கிறது. முட்டியளவுதான் தண்ணி. பக்கத்தில் இருக்கும் பையனிடம் ஒரு பிளாஸ்டிக் புட்டி வாங்கி மொண்டு மொண்டு குளித்தேன். செம சுகமாக இருந்தது. நாராயணனும் என்னுடன் சேர்ந்துகொண்டார். அவர் அந்த தண்ணியிலும் ஒரு முழுக்கு போட்டார். எனக்கு அது முடியவில்லை...! குளித்து முடித்து மேலே ஏறினோம். இன்னும் கொஞ்சம் மேலே ஏறினால் 'தென்கயிலை பக்த சபா' சூப்பராக டென்ட் போட்டு வைத்திருந்தார்கள். அப்போது மணி சுமார் மதியம் பன்னிரண்டு. குளிததலோ என்னவோ நல்ல பசி, சாப்பாடு கிடைக்குமா என்று கட்டை ஏங்கியது. ஆனால் நமக்கு என்ன நல்லதோ அதை ஆண்டவன் தருவான் என்பது போல, அங்கே பிஸ்கட், பழம் என்று சாப்பிட்டோம். 

நன்றாக படுத்து தூங்க ஆரம்பித்தோம். அப்போது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. என் முகம் லேசாக சூடாக ஆகியது, பின் வலது கை சூடாக ஆகியது, பின் இடது கை, பிறகு கால்கள். இப்படி உடம்பின் ஒரு ஒரு பாகமாக உடல் சூடாகி சூடாகி சாதரணமகியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வேலை எனக்கு உடம்புக்கு ஜுரம் வருகிறதோ என்று நினைத்து நாராயணனை கேட்டேன். ஆனால் எனக்கு ஜுரம் வருவது போல் கட்டை கூறவில்லை. பின் என் கையை எதேச்சையாக பார்த்த பொது அது பளிச்சென்று இருந்தது. பின்னர் இவையெல்லாம் ஆண்டி சுனையில் குளித்த நற்பலன் என்று நினைத்துகொண்டேன். உண்மையான காரணம் அதுதானா என்று எனக்கு இன்றும் புரிபடவில்லை...! சுமார் மதியம் ரெண்டு மணிக்கு ஏழுந்து ஏழாவது மலையில் இருக்கும் அந்த சுயம்பு தெய்வத்தை தரிசிக்க கிளம்பினோம்...!

No comments:

Him

Him
Himalayas

Search This Blog