இரண்டாம் மலை தாண்டியவுடன் மனசு சந்தோசம் கொள்கிறது, ஆனால் யாரை கேட்கிறது, இது முன்றாம் மலையா என்று? தைரியத்துடன் கேட்டால், இது இரண்டரை மலை என்கிறார்கள்...! அப்போது சரியான நாடு இரவு, இந்த கட்டை தள்ளாடுகிறது, நாராயணனோ செம ஸ்டடி. நான் ஒரு மரத்தை பார்த்தேன், அதனடியில் சூப்பராக ஓலைகள் இருந்தது, அப்படியே படுத்து நானும், என்னால் நாராயணனும், தூங்கி விட்டோம்...! நடு நடுவே பேச்சு குரல் 'யார்ரா இது?' 'டார்ச் அடிக்காதே' '---களா?' என்று. எங்களுக்கு நல்ல தூக்கம், எல்லாம் கனவு போல இருந்தது...!
சுமார் முன்று மணிக்கு எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மூன்றாம் மலை முடித்து நாலாம் மலை ஏறி திரும்பும்போது, எங்களுக்கு முன்னால் சென்றவர்கள் திரும்பி கொண்டு இருந்தார்கள். என்னை பார்த்து விட்டு, 'உனக்கு ஏழு மலை ஏறி சாமிய பாக்கணும்னு என்று இருக்கா?' என்று கேட்டார்கள்
He gives us varied experiences across our life. This blog is about his personal experiences about Him in His Places
Subscribe to:
Post Comments (Atom)
Him
Himalayas
No comments:
Post a Comment