He gives us varied experiences across our life. This blog is about his personal experiences about Him in His Places

Saturday, May 22, 2010

வெள்ளியங்கிரி தரிசனம் - ஆறாம் பாகம்

ஏழாவது மலை ஏறும்போது எல்லாரும் பயமுறுத்தியது கும்பல் பற்றித்தான். நாங்கள் செல்லும்போது மதியமகையால் கூட்டம் இல்லை. வெய்யிலும் மிதமாகவே இருந்தது, எல்லாம் வெள்ளியங்கிரீஸ்வரர் சித்தம். நாராயணன் பறந்து சென்றார். அவருக்கு உடல் என்று ஒன்று இருக்கிறதா என்று சில சமயம் சந்தேகமாக இருக்கிறது. அப்போதுதான் அவருள் இருக்கும் சித்தர் வெளியே தெரிகிறார். 

ஏழாவது மலை முழுக்க இறை வடிவம். மலையே ஈசுவரனாக காட்சி அளிக்கிறார். 

உச்சியில் இருக்கும் கோயில், வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய திருத்தலம். அங்கே செல்லும்போது எல்லாப் பற்றும் விட்டு விடுகிறது. எல்லாம் அவன் இயக்கத்தில் நடக்கிறது என்று உறைக்கிறது. இதை ஏழுதும் நானும், படிக்கும் நீங்களும் ஏற்கனவே இதை செய்ய வேண்டும் என்ற நியதி எழுதப் பட்டிருகிறது என்பது புரிகிறது. குதூகலமும் குறையும் இல்லாத ஒரு பெருநிலை...! உணர்ந்தால்தான் அது புரியும்...!


உங்களுக்கு இங்கே சிவலிங்கமும், ஆவுடையாரும் தெரிந்தால், வெள்ளியங்கிரியின் மகிமை புரியும்...! இது தானே அமைந்த அமைப்பா, அல்லது யாரோ உருவாகியதா? இது உருவாக்க கூடிய உருவமாக தெரியவில்லை...! நமக்கு மேலே இயங்கும் சக்தி இதை செய்தது போல தெரிகிறது...!

தரிசனம் முடிந்த பின் கீழே இறங்கி வந்தோம். இறங்குவதற்கு எனக்கு இன்னுமொரு உதவி கிடைத்தது. இறங்கும்போது நாலு ஈக்கள் என் முன்னே பறந்துகொண்டே இருந்தன. இந்த ஈக்கள் அல்லது சிறு பூச்சிகள் ஏன் அப்படி பறக்கின்றன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இவை இதைபோன்றே குறைந்தது நாலு அல்லது ஐந்து முறை செய்து காட்டின. சில சமயம் என் முன்னால், சில சமயம் நான் பிடித்திருக்கும் குச்சி மீது என்று மாறி மாறி பறந்து விளையாடின.

நாலரைக்கு இறங்க ஆரம்பித்து ஐந்தரைக்கு ஆறாவது மலைக்கு இறங்கியாயிற்று. டெண்டுக்கு வந்தோம், எட்டு மணிக்கு இறங்கலாம் என்று நினைத்தோம். அவன் நினைப்பு வேறாக இருந்தது. ஆறு மணிக்கு கும்மிருட்டு. ஆறேகாலுக்கு நல்ல மழை. மலையுச்சியில் மழையில் இரவில் என்று அனுபவமே ஒரு வித்தியாசமாக இருந்தது. அவன் வீட்டுக்கு வந்து ராத்தங்கி போக வேண்டும் என்பது அவன் விருப்பம் போல இருந்தது.

அடுத்த நாள் காலை நாலு மணிக்கு நடையை கட்டினோம். அவன் இயக்கிய மாத்திரத்தில் மூன்றாம் மலையை ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தோம். இப்போது எல்லாம் மங்களந்தான். கடையில் கூழ் குடித்துக்கொண்டும், பழம் உண்டும் குறைவிலாது பசியாறினோம். என்னால் நாராயணனுக்கு இன்னும் ஒரு சோதனை. கிழே சென்றதும் எனக்கு ஒரு fanta வேண்டும் என்று கூறினேன். அவர் எனக்கு முன்பாக இறங்கி Fanta வாங்கிகொண்டு குறைந்தது 200 படி ஏறி வந்து விட்டார். ஆக எனக்கு கடமையை முடிக்கும் முன்பே பரிசு...!

கீழே இறங்கி வெள்ளிங்கிரீஸ்வரர் பிரதோஷ தரிசனம் செய்து, நல்ல ஆசிர்வாதங்குளடன், நல்ல  சந்தோசத்துடன், நல்ல எண்ணங்களுடன் பேருந்து ஏறி இல்லம் வந்தடைந்தோம்...! சிவாய் நம...!

வெள்ளியங்கிரி தரிசனம் - ஐந்தாம் பாகம்


ஆண்டி சுனை என்பது அதிஅற்புதமான நீருற்று. சும்மா ச்ச்ச்சில் என்று இருக்கும் தண்ணி நாங்கள் அங்கே சென்ற நேரம் காலை சுமார் பத்து மணி இருக்கும். சாதாரணமாக தண்ணி கண்டால் கொஞ்சம் ஜகா வாங்கும் நான் , இங்கே குளித்தே ஆகா வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டுவிட்டேன். 


சுனையில் இறங்கினால், செம சில்லென்று இருக்கிறது. முட்டியளவுதான் தண்ணி. பக்கத்தில் இருக்கும் பையனிடம் ஒரு பிளாஸ்டிக் புட்டி வாங்கி மொண்டு மொண்டு குளித்தேன். செம சுகமாக இருந்தது. நாராயணனும் என்னுடன் சேர்ந்துகொண்டார். அவர் அந்த தண்ணியிலும் ஒரு முழுக்கு போட்டார். எனக்கு அது முடியவில்லை...! குளித்து முடித்து மேலே ஏறினோம். இன்னும் கொஞ்சம் மேலே ஏறினால் 'தென்கயிலை பக்த சபா' சூப்பராக டென்ட் போட்டு வைத்திருந்தார்கள். அப்போது மணி சுமார் மதியம் பன்னிரண்டு. குளிததலோ என்னவோ நல்ல பசி, சாப்பாடு கிடைக்குமா என்று கட்டை ஏங்கியது. ஆனால் நமக்கு என்ன நல்லதோ அதை ஆண்டவன் தருவான் என்பது போல, அங்கே பிஸ்கட், பழம் என்று சாப்பிட்டோம். 

நன்றாக படுத்து தூங்க ஆரம்பித்தோம். அப்போது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. என் முகம் லேசாக சூடாக ஆகியது, பின் வலது கை சூடாக ஆகியது, பின் இடது கை, பிறகு கால்கள். இப்படி உடம்பின் ஒரு ஒரு பாகமாக உடல் சூடாகி சூடாகி சாதரணமகியது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு வேலை எனக்கு உடம்புக்கு ஜுரம் வருகிறதோ என்று நினைத்து நாராயணனை கேட்டேன். ஆனால் எனக்கு ஜுரம் வருவது போல் கட்டை கூறவில்லை. பின் என் கையை எதேச்சையாக பார்த்த பொது அது பளிச்சென்று இருந்தது. பின்னர் இவையெல்லாம் ஆண்டி சுனையில் குளித்த நற்பலன் என்று நினைத்துகொண்டேன். உண்மையான காரணம் அதுதானா என்று எனக்கு இன்றும் புரிபடவில்லை...! சுமார் மதியம் ரெண்டு மணிக்கு ஏழுந்து ஏழாவது மலையில் இருக்கும் அந்த சுயம்பு தெய்வத்தை தரிசிக்க கிளம்பினோம்...!

வெள்ளியங்கிரி தரிசனம் - நான்காம் பாகம்

'மனசு, பார்க்க வேண்டும் என்று குதிக்கிறது, புத்தி 'முடியுமா' என்று பயம் காட்டுகிறது' என்று சொன்னேன். 'அப்போ கிளம்பு' என்றார் நாராயணன். அந்த சமயம் காலை நாலு மணி இருக்கும்...! நல்ல வரம் பெற்று வந்திருந்ததால் நல்ல வார்த்தை வந்தது...! எல்லாம் பெரியோர் ஆசீர்வாதம். எழுந்தோம், நடந்தோம் ஒரு கட்டஞ்ச்சாய் குடித்தோம், அவ்வளவுதான், சூப்பர் நடராஜா சர்வீஸ்தான்...! 


வெள்ளியங்கிரீஸ்வரர் எங்களுக்கு வேண்டிய பலத்தையும் தெம்பையும் கொடுத்து நடத்தி வைத்தார். வழியெல்லாம் பச்சை பசேலென்று இருந்தது. இப்போது அதிகமாக சம வெளி, பார்க்க பார்க்க ரம்மியமாக இருந்தது...! நினைத்து பாருங்கள், பெரிய திறந்தவெளி, சுற்றிப்பார்த்தால் ஊர் குட்டியாக தெரிகிறது. கிழே மிதக்கும் மேகங்கள், குளு குளு என்று காற்று, வேறு என்ன வேண்டும், சுறு சுறு நடைக்கு. அனைத்தையும் செய்து கொடுத்தார் அந்த வெள்ளியங்கிரீச்வர்.


ஐந்தாவது மலையில் இன்னொரு நண்பர் குழுவை பார்த்தோம். அப்போது ஞாயிறு காலை ஒன்பது மணி இருக்கும். எங்களை பார்த்து கொஞ்சம் ஆச்சரியப் பட்டு போனார்கள். என்னால் மெல்ல வரும் நாராயணனை பார்த்து எனக்குதான் சங்கடம். ஆனால் அவர் சங்கடப் பட்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை...! இந்த இடத்திலாவது நாராயணனை பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நாராயணன் ஒரு பெரிய யோகி (நீங்கள் எதிர்பார்க்கும் ஜடா முடியுடன் அல்ல...!) சித்தர் என்றே சொல்லலாம். முக்காலம்  உணர்ந்தவர், அனால் பரப்பிரமம் போல காட்டிகொள்வார். சில சமயங்களில் 'அதை செய்யாதே' என்பார், காரணம் சொல்ல மாட்டார். நாமாக புரிந்து கொண்டு நிறுத்த வேண்டும். சொன்னதை கேட்காமல் எதாவது வம்பில் மாட்டிகொண்டால், பிறகு அசடு வழிந்துகொண்டு அவர் முன் நிற்க வேண்டும். இத்துணை சிறப்பு பெற்ற நாராயணன் வயதில் என்னை விட இளையவர், ஞானத்தில் பெரியவர். அவரோடு நான் செல்கிறேன் என்பது இன்னும் ஒரு சிறப்பு, எல்லாம் வெள்ளியங்கிரீச்வர் சித்தம்.


எங்களை எதிரே பார்த்தவர்கள், எங்களுக்கு (முக்கியமாக எனக்கு) பேரிச்சம் பழம், கடலை, பழம் என்று கொடுத்தார்கள். 



இதுதான் அந்த இடம். இந்தப் படத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பது உங்கள் யூகம். இந்த இடத்தில்தான் பீமன் உருண்டை என்று ஒரு பெரிய்ய்ய்ய பாறையை காட்டினார்கள்.  அது ஒரு ஏழு மாடி எட்டு மாடி சைசில் இருந்தது. கொஞ்சம் உற்று பார்த்தால் பயமாக இருந்தது. ஆனால் இப்போது ஏழாவது மலையே மனதில் இருந்தது. எதை பார்த்தாலும் சந்தோசமும் மவுனமும் சேர்ந்தே தோன்றியது. உள்ளுக்குள்ளே வேறு எதோ நடந்து கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தது - அது என்னவென்று தெரியவில்லை, இதுவரை...!


ஆறாவது மலை 'திருநீர் மலை'. இங்கே மண்ணெல்லாம் விபூதி போன்றே இருக்கிறது. பார்ப்பதற்கு மட்டுமல்ல வாசனையும் விபூதி போலவே உள்ளது. நிறையபேர் அங்கே மண்ணை சுரண்டி பிரசாதம் போல கொண்டு வருகிறார்கள். ஆறாவது மலை முடியும் இடத்தில இருப்பது, அற்புத ஆண்டி சுனை...!

Tuesday, May 4, 2010

வெள்ளியங்கிரி தரிசனம் - முன்றாம் பாகம்

இரண்டாம் மலை தாண்டியவுடன் மனசு சந்தோசம் கொள்கிறது, ஆனால் யாரை கேட்கிறது, இது முன்றாம் மலையா என்று? தைரியத்துடன் கேட்டால், இது இரண்டரை மலை என்கிறார்கள்...! அப்போது சரியான நாடு இரவு, இந்த கட்டை தள்ளாடுகிறது, நாராயணனோ செம ஸ்டடி. நான் ஒரு மரத்தை பார்த்தேன், அதனடியில் சூப்பராக ஓலைகள் இருந்தது, அப்படியே படுத்து நானும், என்னால் நாராயணனும், தூங்கி விட்டோம்...! நடு நடுவே பேச்சு குரல் 'யார்ரா இது?' 'டார்ச் அடிக்காதே' '---களா?' என்று. எங்களுக்கு நல்ல தூக்கம், எல்லாம் கனவு போல இருந்தது...!

சுமார் முன்று மணிக்கு எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். மூன்றாம் மலை முடித்து நாலாம் மலை ஏறி திரும்பும்போது, எங்களுக்கு முன்னால் சென்றவர்கள் திரும்பி கொண்டு இருந்தார்கள். என்னை பார்த்து விட்டு, 'உனக்கு ஏழு மலை ஏறி சாமிய பாக்கணும்னு என்று இருக்கா?' என்று கேட்டார்கள்

Saturday, May 1, 2010

Velliangiri Darisanam - Part 2

We were twelve of us and ten walked before me and we two, myself and Narayanan were following. I should clearly state something here. If at all I was able to do something, it was because of the Forefathers Blessings, Divine Blessings and Narayanan's support for me. Narayanan is by itself a very mystical person with high premonitions and a very low profile person. Whatever he utters comes out with some reason, which could actually sound illogical for the person who hears it. Narayanan's wordings are honored with time. Such a great soul was guiding me and helping me during this Velliangiri Darisanam.

The first mountain is full of steps. Some tell it is 3000 and some tell it is 5000. I'm not sure. One is expected to just keep walking here and not bother about when the steps are going to get over. I remember that when I first climbed, I came to the middle of this first mountain and asked a descending person 'how long shd I walk?'. He smiled and told 95% yet to be walked...!

The steps are half foot to one foot high and you realize they are 'great places' to climb, only when you reach other mountains. When you come to a plain terrain and when you see 'Vellai Pillayar' you know you have completed the first mountain. The lemon salt soda in the soda factory opposite to the temple is a must for all Devotees. I actually had two glasses of lime salt soda and fall on my back for a small nap. My team's fore runners were in no mood to wait and went ahead. I was going at my own pace and my own time, the time He had dictated.

After a good power nap, myself and Narayanan started again and reached the 'vazhukku paarai' the second mountain's indicators. This is also a long walk and all on the cut out surfaces of the rocks. For obivious reasons there are no shops in second mountain. When you complete the 'vazhukku paarai' you know you've finished second mountain and started getting into third mountain...! It's a great entry into 3rd mountain, which gave us the needed break and sleep...!

Velliangiri Darisanam - Part 1

Velliangiri - The thought of the same has always been mystical for me...! Trying to explain the same I should travel backwards in time, which may be boring for you. To restrict myself, I need to tell, that He has invited us during the Chitra Pournami of 2008. It was too playful on our side and we took it very easily, as we have always been, and climbed the Hill.

My friends are feather weight unlike me, who is heavy weight. In 2008, He took me till third mountain and my friends told to stay back for everyone goodness...! I did so. I thought He wanted to climb till 3rd mountain only. I was perfectly happy. But then, I always wanted to meet Him again at His Home on seventh mountain. He gave the dream and I put the responsibility on His Shoulders.

Now, in 2010, before Chitra Pournami, He has brought me here and 'm not sure what is in store for me. I was perfectly fine to go any long, either it be two steps or seven mountains, anything is His Wish. I was totally happy with what He was going to give me, nothing conditional.

We reached Coimbatore on 24th Apr 2010 morning and reached Isha Yoga by noon. We had a dip in the pool with Spadiga Lingam and got His Blessings. We then went to Dhyana Lingam and meditated to get His Wishes for our Velliangiri Darisanam.

Around 4 PM we reached the temple and had darisanam of Manonmani Amman sametha Velliangiriswarar. By around 5:30 PM we had bought our kombu and had started climbing Velliangiri mountain with His Blessings...!

Him

Him
Himalayas

Search This Blog